கன்னியாகுமரி: நாகர்கோவில் சந்திப்பு தொடர்வண்டி நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையமாகும். இங்கிருந்து வடமாநிலங்கள் முழுவதற்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் நிலையத்தில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இச்சூழலில், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் இவர்களுக்கு மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று தொடர்வண்டி நிலையத்திற்கு, பாஜக நாகர்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி வந்தார்.
தொடர்ந்து, அவர் தலைமையில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்கள் பாஜக சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ரயில் நிலைய மேலாளர் முத்துவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மணிகண்டன், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன், நகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு!