ETV Bharat / state

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி! - radhakrishnan

pon. radhakrishnan fray in kanyakumari கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி! பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி பாஜக காங்கிரஸ் radhakrishnan radhakrishnan fray in kanyakumari

author img

By

Published : Mar 6, 2021, 11:49 AM IST

Updated : Mar 6, 2021, 1:29 PM IST

11:43 March 06

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஹெச். வசந்தகுமார் கரோனா பெருந்தொற்று காரணமாக காலமானார். இந்நிலையில் அத்தொகுதிக்கு சட்டப்பேரவை தேர்தலோடு ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஹெச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக, அதிமுக இடையே நேற்று நள்ளிரவில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு வருகிறார். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், இந்துக் கல்லூரியிலிருந்து பெருந்தலைவர் காமராஜர் சிலை வரை நடைபெறும் பேரணியில் கலந்துகொள்கிறார்.

அப்போது அவர் பொதுமக்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரிக்கிறார் அமித் ஷா. இந்நிலையில் கன்னியாகுமரி வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கிறார் அமித் ஷா!

Last Updated : Mar 6, 2021, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.