குமரி மாவட்டம், கீரிப்பாறை, புதுநகர்ப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகமற்ற புறம்போக்கு நிலத்தை அப்பகுதி மலைவாழ் மக்கள் சிலர் திருத்தி, அதில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். சுமார் அரை நூற்றாண்டாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களுக்கு அரசால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளுக்கு வரி செலுத்தியுள்ளனர். இப்பகுதிகளுக்கு அரசு சார்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வனத்துறையினர் இப்பகுதி மக்களை அங்கிருந்து காலி செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குமரி மாவட்ட பாஜக சார்பில், 50 ஆண்டு காலமாக அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் தொடர்ந்து வாழ வழி செய்ய வேண்டும் எனவும், அப்பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தி மனு அளித்தனர்.