ETV Bharat / state

கழுத்துக்கு பெல்ட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்.. நாகர்கோவிலில் நடந்தது என்ன? - திமுக

திமுக பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்களை கழுத்தை அறுத்து விடுவேன் என நாகர்கோவில் மாநகராட்சி மேயர் சைகை காண்பித்ததாக குற்றஞ்சாட்டி பாஜக கவுன்சிலர்கள் கழுத்தை பாதுகாக்கும் வகையில் பெல்ட் அணிந்து வந்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பாஜக கவுன்சிலர்கள் கழுத்துக்கு பாதுகாப்பு வேண்டும்; கழுத்துக்கு பெல்ட் அணிந்து வந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்

author img

By

Published : Nov 29, 2022, 3:09 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர்கள் 11 பேர் கழுத்தில் பெல்ட் அணிந்து பங்கேற்றனர். கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மாநகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக கூறி அதை கண்டிக்கும் வகையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் பாஜக கவுன்சிலர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், பாஜக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். தங்கள் போராட்டம் தொடர்பாக பாஜக கவுன்சிலர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ், பாஜக தொண்டர்களை கொலை செய்து விடுவேன் என சைகை காட்டி பேசினார் அதை கண்டிக்கும் வகையில் கழுத்தில் பாதுகாப்பு உறை அணிந்து வந்துள்ளோம்” என்று கூறினார்.

பாஜக கவுன்சிலர்கள் கழுத்துக்கு பாதுகாப்பு வேண்டும்; கழுத்துக்கு பெல்ட் அணிந்து வந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்

மேலும் ”கடந்த சுதந்திர தின விழாவின் போது மாநகராட்சிக்கு தேசியக் கொடிகள் வாங்கியது மற்றும் பாதாள சாக்கடைக்கு தோண்டியதில் எடுத்த மண்ணை அனாதை மடம் மைதானத்தில் வைத்து அந்த மண்ணை அகற்றியதிலும் என மொத்தம் சுமார் ரூ.50 லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியும் வெளிநடப்பு” போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பேருந்தை ஓட்டி சென்ற எம்எல்ஏ...கியர் போட்ட ஓட்டுனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.