நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. இதன் ஒருபகுதியாக, வெளிநாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும், சொந்த ஊருக்கு திரும்புவர்களை தனிமைப்படுத்த முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் வைத்து சோதனைகள் மேற்கொள்ளபட்டுவருகிறது. பின்னர் அவர்களை தனிமைப்படுத்துவதற்காக நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மஸ்கட் மற்றும் ராணுவத்தில் இருந்து வந்தவர்கள் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் எதுவும் இல்லாததால் தங்களை வீட்டுக்கு அனுப்புமாறும், அலுவலர்கள் தங்களது பிரச்னை குறித்து செவிசாய்க்கவில்லை இல்லை என்றும் வாட்ஸ்அப் மூலம் கோரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மேலும், அதில் அலுவலர்களுக்கு போன் செய்தால் அவர்கள் மிரட்டுவதாக ராணுவ வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: மாநில உள்துறை முதலமைச்சர் பழனிசாமி வசம் இருக்கக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு!