ETV Bharat / state

செங்கல்சூளைத் தொழிலாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் - எம்.எல்.ஏ. விஜயதாரணி - Damaged brick kilns

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செங்கல் சூளைகள் சேதமடைந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், செங்கல் சூளைகளுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என, விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள செங்கல் தொழிலாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் - எம்எல்ஏ விஜயதாரணி

author img

By

Published : May 29, 2021, 7:49 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை பெய்து, அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாகி அதிகளவில் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கோதையாறு, தாமிரபரணி, பரழியாறு ஆற்றங்கரை பகுதிகளான மூவாற்றுமுகம், கடைவிளை, திக்குறிச்சி , குழித்துறை போன்ற பகுதிகளில் உள்ள செங்கல்சூளை மற்றும் உலர வைத்திருந்த செங்கற்கள் இந்த வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

இதனால் சுமார் ஆறு கோடி மதிப்பிலான செங்கல்கள் வெள்ளத்தில் மூழ்கி வீணானது. சூளையில் எரிக்கப்பயன்படுத்தபடும் விறகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழைசெங்கல்சூளைத் தொழிலாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும்

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள செங்கல்சூளை தொழிலாளர்களின் இடங்களை விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், விளவங்கோடு தொகுதியில் கடைவிளை, திக்குறிச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவு செங்கல்சூளைத் தொழில் நடைபெறுகிறது. இந்த பகுதியில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்புகளை உணர்ந்து, செங்கல்சூளை தொழிலாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்வதோடு, நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:வெப்பச்சலனம்: கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.