ETV Bharat / state

Bakrid: நாகர்கோவிலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்! - kanyakumari seithikal

கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை!

author img

By

Published : Jun 28, 2023, 2:18 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை!

கன்னியாகுமரி: உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பண்டிகையாகும்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பு உள்ள தெருவில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இறைவனின் தூதராக இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகக் கருதப்படும் இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்ததாகவும், அவரது வயது முதிர்ந்த காலத்தில் இறைவன் அருளால் அவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளதாகவும், அந்த குழந்தைக்கு இஸ்மாயீல் என பெயரிட்டு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

இந்த நிலையில், இப்ராஹிம் கனவில் தோன்றி உன் மகன் இஸ்மாயீலை தனக்கு பலி கொடுக்க கட்டளை பிறப்பித்து உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் தூதுவரான இப்ராஹிம் மகனின் அனுமதியுடன் பலி கொடுக்க துணிந்தபோது வானதூதர் மூலம் கடவுள் அதனை தடுத்துள்ளதாகவும் பதிவுகள் கூறுகின்றன. மேலும், இப்ராஹிமின் மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டினை அறுத்து பலி கொடுக்க இப்ராஹிமிடம் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் தியாகத் திருநாள் என அழைக்கபட்டு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவார்கள்.

பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை இறைவனுக்கு பலி கொடுத்து அதனை மூன்று சம பங்காக வைத்து ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துவது இந்த ஈகைத் திருநாளின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது.

இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ் மாதம் 10ஆம் நாள் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றால் சாதனை; பிரதமர் மோடி சென்றால் விமர்சனம் செய்வதா?" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.