ETV Bharat / state

கேரள இளைஞருக்கு வேப்பமரத்தடியில் சிகிச்சை

author img

By

Published : May 30, 2020, 3:01 AM IST

கன்னியாகுமரி: கரோனா தொற்று பயத்தால் மயங்கி விழுந்த கேரள இளைஞருக்கு வேப்பமரத்தடியில் வைத்து சிகிச்சை பார்க்கப்பட்டது.

கேரளா இளைஞர்
கேரளா இளைஞர்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் சந்தனத்தோப்பு, சினிபவன் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் உதயகுமார். இவர் கேரளாவிலிருந்து கடற்கரை வழியாக கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது திடீரென வயிற்று வலி, உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மயங்கி கீழே விழுந்து விட்டார். மயக்கத்தில் இருந்த இளைஞரைக் கண்ட, அந்தப் பகுதியில் உள்ள சிலர் ஆட்டோவில் ஏற்றி, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் வந்த உதயகுமாரை மருத்துவ பணியாளர்கள் கரோனா பீதியால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அறையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், அதன் முன்பக்கத்தில் உள்ள வேப்பமரத்தடியில் ஒரு பெஞ்சில் படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

மேலும் அந்த இளைஞரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. பின்னர் இரவு 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது.

இதனால் பல மணி நேர காத்திருப்புக்குப்பின் அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உடல்நலம் பாதித்த கேரள இளைஞருக்கு கரோனா இருப்பதாக நினைத்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளியே திறந்த வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இயற்கை இரக்கமற்றது: தி பேர்ட்ஸ், லோக்கஸ்ட் அட்டாக், கார்ப்பரேட் எதிர்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.