ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம்: குமரிக் கடற்பரப்பில் பாதுகாப்பு கருதி ‘ஆபரேஷன் சவுகஸ்’

கன்னியாகுமரி: டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் பொருட்டு கடல் பகுதிகளில் ‘ஆபரேஷன் சவுகஸ்’ OPERATION CHAUKAS என்ற மூன்று நாள் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது.

author img

By

Published : Dec 4, 2019, 12:06 PM IST

OPERATION CHAUKAS
OPERATION CHAUKAS

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, குமரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர மீனவ கிராமங்கள் வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், அசம்பாவிதங்கள் போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு பலகட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடலோரக் காவல் படை எடுத்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை பகுதிகள், மீனவ கிராமங்களில் ‘ஆபரேஷன் சவுகஸ்’ (OPERATION CHAUKAS) என்ற பெயரில் மூன்று நாட்கள் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புப் படை காவல் துறையினர் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகிறார்கள்.

இவர்கள் அதிவிரைவு ரோந்து படகுகள், தொலை நோக்கிக் கருவிகள் மூலமாக கடல், கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், ஆழ்கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் படகுகள் காணப்பட்டாலோ, அடையாளம் தெரியாத ஆட்கள் தென்பட்டாலோ உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம்: குமரிக் கடற்பரப்பில் பாதுகாப்பு கருதி ‘ஆபரேஷன் சவுகஸ்’

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகையானது, 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மேலும் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Intro:பாபர் மசூதி தீர்ப்பு சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு குமரி கடல் பகுதிகளில் OPERATION CHAUKAS என்ற மூன்று நாள் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை துவங்கியது. Body:tn_knk_01_operation_chaukas_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

பாபர் மசூதி தீர்ப்பு சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு குமரி கடல் பகுதிகளில் OPERATION CHAUKAS என்ற மூன்று நாள் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை துவங்கியது.
பாபர் மசூதி தீர்ப்பு சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமரி கடல் மற்றும் கடலோர மீனவ கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு குமரி கடல் பகுதிகளான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை பகுதிகள் மற்றும் மீனவ கிராமங்களில் OPERATION CHAUKAS என்ற பெயரில் மூன்று நாட்கள் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை ஆறு மணிக்கு ஆரம்பித்தது. இந்த ஒத்திகையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு படை போலிஸாரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அதிவிரைவு ரோந்து படகுகள் மற்றும் தொலை நோக்கி கருவிகள் மூலமாக குமரி கடல் மற்றும் மீனவ கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மேலும் ஆழ்கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் படகுகள் காணப்பட்டாலோ கடற்கரை மற்றும் மீனவ கிராமங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனடியாக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணி ஆரம்பித்த இந்த பாதுகாப்பு ஒத்திகையானது வரும் 7 ம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.மேலும் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விஷுவல் - பாதுகாப்பு ஒத்திகைConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.