ஐதராபாத்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு நேற்று (அக்.3) திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரஷித் கான் திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.
ரஷித் கானின் திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டலில் நடந்தது. தனியார் ஹோட்டலில் நடந்த திருமண விருந்தில் வண்ண வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டு இடமே விழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. ரஷித் கானின் திருமணத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது நபி, ஒரேயொரு கிங் கான் ஆன ரஷித் கான் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to the one and only King Khan, Rashid Khan, on your wedding! Wishing you a lifetime of love, happiness, and success ahead.@rashidkhan_19 pic.twitter.com/fP1LswQHhr
— Mohammad Nabi (@MohammadNabi007) October 3, 2024
மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். மேலும், திருமணம் நடந்த ஹோட்டலில் துப்பாக்கி ஏந்திய படி பலர் சுற்றித் திரிந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
26 வயதாகும் ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் கான் அறிமுகம் ஆனார்.
Scene outside Kabul imperial continental hotel which is hosting the wedding ceremony of King Khan 👑🤩🥵 pic.twitter.com/JSZuWiAIIn
— Team ℛashid Khan (@RashidKhanRK19) October 3, 2024
மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக வலம் வந்த ரஷித் கான், பல் முக்கிய போட்டிகளில் அணி வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளார். ரஷித் கானின் தலைமையின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் அறிமுகமான ரஷித் கான், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க: ஒருமுறை கூட அவுட்டே ஆகாமல் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள்! லிஸ்ட்ல யாரார் இருக்கா தெரியுமா? - Batters Never out in ODI