ETV Bharat / state

'வாரணாசியில் பிரதமருக்கு எதிராக நிற்க வேண்டாம்' - பொன்.ராதா கோரிக்கை!

கன்னியாகுமரி: "பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் மனுத்தாக்கல் செய்யும் முடிவை பின் வாங்க வேண்டும்" என்று, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Radhakrishnan
author img

By

Published : Mar 24, 2019, 4:28 PM IST

மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமாருக்கு சீட்டு கொடுத்தது காங்கிரஸ் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம். இது அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த நாங்குநேரி தொகுதி மக்களை நட்டாற்றில் விடுவது போன்றதாகும்.

வாரணாசி தொகுதியில் பிரதமருக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் மனு செய்வதாக கூறியுள்ளனர். இந்த முடிவை அவர்கள் பின் வாங்க வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என அய்யாக்கண்ணுவிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். தேர்தல் நடத்தை விதிமுறை என அதிகாரிகள் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த அடையாளச் சின்னம் மற்றும் தேசிய கொடிக்கம்பம் மேடைகளை இடித்து அகற்றிய அதிகாரிகள் மீது குமரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில வணிக நிறுவனங்கள் வேட்பாளரின் பெயரை தாங்கி கொண்டு விளம்பரம் மற்றும் இலவசங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் ஆணையம் இதற்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் கோரிக்கையான வெளிநாட்டு ரப்பர் பால் இறக்குமதிக்கு தடை செய்து, உள்நாட்டு ரப்பர் பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த நான் முயற்சி எடுத்தேன். அதற்கு இங்கு உள்ள 6 சட்டமன்ற உறுப்பினரும் என்னுடன் ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் வெற்றி பெற முடியாத சூழலில் உள்ளதால் தென் மாநிலங்களில் குறிவைத்து, குறிப்பாக கேரளாவை குறிவைத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வேலை பார்த்து வருகின்றது, என்றார்.

Intro:வாரணாசி தொகுதியில் பிரதமருக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் மனு செய்வதை பின் வாங்க வேண்டும் அய்யாக்கண்ணுக்கு கோரிக்கை விடுப்பதாக சாமிதோப்பில் கன்னியாகுமரி பாஜக பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.

Body:வாரணாசி தொகுதியில் பிரதமருக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் மனு செய்வதை பின் வாங்க வேண்டும் அய்யாக்கண்ணுக்கு கோரிக்கை விடுப்பதாக சாமிதோப்பில் கன்னியாகுமரி பாஜக பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்தார் பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமாருக்கு சீட்டு கொடுத்ததன் மூலம் அந்த தொகுதி மக்களுக்கு காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது அங்கு அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு செய்யும் துரோகம் நாங்குநேரி தொகுதி மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு விட்டது போன்ற செயலாகும்
வாரணாசி தொகுதியில் பிரதமருக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் மனு செய்வதை பின் வாங்க வேண்டும். இதை அய்யாக்கண்ணு நான் கோரிக்கையாக வைக்கிறேன் .தொடர்ந்து தமிழ்நாட்டை அவமானப்படுத்த வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறை என அதிகாரிகள் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த அடையாளச் சின்னம் மற்றும் தேசிய கொடி கம்பம் மேடைகளை இடித்து அகற்றிய அதிகாரிகள் மீது குமரி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில வணிக நிறுவனங்கள் வேட்பாளரின் பெயரை தாங்கி கொண்டு விளம்பரம் மற்றும் இலவசங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு உடனடியாக இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் கோரிக்கையான வெளிநாட்டு ரப்பர் பால் இறக்குமதியை தடை செய்து உள்நாட்டு ரப்பர் பாலின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நான் முயற்சி செய்தபோது இங்கு உள்ள 6 சட்டமன்ற உறுப்பினரும் என்னுடன் ஒத்துழைக்க வில்லை. காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் வெற்றி பெற முடியாத சூழலில் உள்ளதால் தென் மாநிலங்களில் குறிவைத்து குறிப்பாக கேரளாவை குறிவைத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இங்கு வேலை பார்த்து வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.