கன்னியாகுமரியில் 144 தடை உத்தரவால் பொது இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக தற்காலிக சந்தைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு காய்கறிகள் வாங்குவதற்காக அதிகளவில் குவிந்து வருகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தொற்று குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர்களால் கரோனா தடுப்பு விழிப்புணர்வுக்காக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியர்கள், தங்கள் கைவண்ணத்தால் வரைந்துள்ள இந்த ஓவியங்கள் பொதுமக்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை