ETV Bharat / state

கத்திக் குத்து வாங்கிய காவலர்கள் - பிடிபட்ட கஞ்சா வியாபாரி - கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம்

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற இரண்டு தனிப்படை காவல் துறையினரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

பிடிபட்ட கஞ்சா வியாபாரி
பிடிபட்ட கஞ்சா வியாபாரி
author img

By

Published : Apr 21, 2020, 1:40 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக நடந்து வந்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் வேகமாக பரவியது. இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது அருந்துபவர்கள் மதுபானம் கிடைக்காமல் பல இடங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வருகின்றனர். அதே நேரத்தில் மதுபானம் கிடைக்காமலும், கள்ளச்சாராயம் கிடைக்காமல் தவிக்கும் சிலர் மதுபோதைக்கு பதிலாக இந்த தடை காலத்தில் கஞ்சா பக்கம் திசை திரும்பியுள்ளனர்.

பிடிபட்ட கஞ்சா வியாபாரி

இவர்களை குறிவைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கஞ்சா வியாபாரிகள் மறைமுகமாக செயல்பட்டு வந்தனர். இவர்களை காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் இன்று காலை 10 மணி அளவில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்த கஞ்சா வியாபாரி அஜித் (30) மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை சுற்றிவளைத்தனர்.

இதில் ஆத்திரமடைந்த அஜித் தன்னை பிடிக்க முயன்ற தனிப்படை தலைமைக் காவலர் வீரமணி, சிவாஜியை சரமாரியாக கத்தியால் தாக்கினார். இதில் வீரமணிக்கு நெஞ்சில் கத்திக்குத்து விழுந்தது. சிவாஜிக்கும் கத்திக்குத்து விழுந்தது பின்னர் அவரது கையை கடித்த அஜித், சிவாஜியிடமிருந்து நழுவப் பார்த்தார். அப்போது மற்ற தனிப்படை காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து கத்தி குத்தில் காயமடைந்த தனிப்படை தலைமைக் காவலர்கள் இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அஜித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு கஞ்சா வியாபாரிகளை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: செய்தியாளர்கள் சந்திப்பை அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.