ETV Bharat / state

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் துவக்கம்..! 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு..!

Silambam: ஆசிய அளவில் 4 நாட்கள் நடைபெறும் சிலம்பம் போட்டிகள் நாகர்கோவிலில் துவங்கியது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Silambam
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் துவக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 1:06 PM IST

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் துவக்கம்

கன்னியாகுமரி: தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை ஆண்கள், பெண்கள் என அனைவரும் கற்று விளையாடி வருகின்றனர். குறிப்பாகத் திருவிழாக்கள், கோயில் விழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் தனியார் அமைப்புகளால் சிலம்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம் பெற்று வருகிறது.

ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டைக்கு ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்தனர். அதில் மிகவும் பழமை வாய்ந்ததாகச் சிலம்பம் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாகச் சிலம்பம் விளையாட்டு குறித்து விவாதிக்கப்பட்டு, ஆசிய கண்டத்தின் சிலம்பம் ஆசியா என அமைப்பு நியமிக்கப்பட்டது.

பின்னர் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிலைக்குச் சிலம்பம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த சிலம்ப தற்காப்புக் கலையை பல்வேறு நாடுகளில் இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். நன்றாக கற்று தேர்ச்சி அடைந்த வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அகில இந்தியச் சிலம்ப சம்மேளனம் மற்றும் ஆசியச் சிலம்பம் ஃபெடரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து சிலம்பம் போட்டிகளைக் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான 5வது ஆசியச் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த போட்டியில் 10 வகையான தனித்திறன் போட்டிகள், குறிப்பாக நெடுங்கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, அலங்கார கம்பு வீச்சு, வாள்வீச்சு, சுருள்வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வயதிலும் ஒன்பது எடைப் பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் உலக சாம்பியன் சிலம்பம் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக சிலம்பம் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறும்போது, “நான்காவது உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப்ரவரி மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகளின் தேர்வு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நாகர்கோவிலில் வைத்து நடைபெறும். கிரிக்கெட் இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கிறது. அதில் ஆழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் நம் இந்திய மக்கள்.

அதனால் நம் பாரம்பரிய விளையாட்டுகள் நலிவடைந்து வருகிறது. அதிலும் ஒரு சில விளையாட்டுக்கள் எழுச்சி பெற்று வருகிறது. தற்போது சிலம்பம் விளையாட்டுக்குத் தமிழக அரசு மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது பெருமையாக உள்ளது. சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் முன்னுரிமை தர வேண்டும் என்று கோரிக்கையும் நாங்கள் வைக்கின்றோம்.

சிலம்பம் விளையாடும் வீரர் வீராங்கனைகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வர ரயில் பயணங்களில் பயண டிக்கெட்டுகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பாட்டத்தை டெமோ விளையாட்டாக வைத்துள்ளனர். அதனை மறுபரிசீலனை செய்து சிலம்பத்தை மெடல் பிரிவில் இணைக்க வேண்டும் என்றும், சிறப்பு அந்தஸ்து கொடுத்து மற்ற விளையாட்டுகளைப் போன்றே போட்டி விளையாட்டாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிறைவுற்ற முதல் டெஸ்ட்டின் இன்றைய ஆட்டம்.. டீன் எல்கர் சதம் - 11 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.