ETV Bharat / state

கூடங்குளம் அணு உலைகளுக்கு மத்திய அரசு தரச்சான்று - அணுக்கழிவு ஆபத்தை மறைக்க நாடகம் என குற்றச்சாட்டு! - கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம்

கூடங்குளம் அணு உலைகளுக்கு இந்திய அரசு தரச்சான்று வழங்கியது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அணு கழிவுகளால் உருவெடுக்கும் பிரச்சினைகளை மறைக்கவே பத்து ஆண்டுகளு்குப் பிறகு தற்போது மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது என்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.

UTHAYA
கூடங்குளம்
author img

By

Published : Jun 2, 2023, 7:46 PM IST

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேட்டி

கன்னியாகுமரி: கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் என்ற மீனவ கிராம பகுதியில் இந்திய அணுமின் கழகத்தால் நிறுவப்பட்டது. ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம் 6,000 மெகாவாட் திறன் கொண்டது. இதில், ஒன்று மற்றும் 2ஆம் அணு உலைகளில் கடந்த 2013ஆம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களையும் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் வாழும் இடத்தில் அணு உலை செயல்படுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்றும், அணு உலை வெடித்து விபத்து ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். மேலும், அணு உலை கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம், தீவரவாதிகள் தாக்கலாம் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானவை என இந்திய அரசு தரக்கட்டுப்பாட்டு சான்று வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இது தொடர்பாக பேட்டியளித்த உதயகுமார், " 2013ஆம் ஆண்டு முதல் இயங்கும் கூடங்குளம் அணு மின் நிலைய உலைகளுக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இந்திய அரசு தரக்கட்டுப்பாட்டு சான்று வழங்குவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அணு உலை பாதுகாப்பானது என்றால், அதற்கு ரஷ்ய அதிகாரிகள் ஏன் இழப்பீடும், காப்பீடும் தர மறுக்கிறார்கள்?

திடீரென கூடங்குளம் பகுதியில் கதிர்வீச்சு பரிசோதனை நடத்தியிருப்பது ஒரு அச்சத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது. அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், கூடங்குளம் 1, 2 உலைகள் நூறு முறைக்கும் மேலாக திடீரென மூடப்பட்டதற்கு என்ன காரணம்? - 1, 2 உலைகளில் வால்வு பிரச்சினைகள், டர்பைன் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மத்திய அரசு இதுவரை எந்த பிரச்சனையிலும் உண்மையை கூறியதாக தெரியவில்லை. இந்த நிலையில் கூடங்குளம் அணு உலைகளுக்கு திடீரென நற்சான்று வழங்குவது என்பது எதையோ மூடி மறைக்கும் செயல் என்ற சந்தேகம் எழுகிறது.

கூடங்குளம் 1, 2 அணு உலைகளை பாரபட்சமற்ற பன்னாட்டு குழுவை நிறுவி ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக் கழிவுகளால் பெரும் பிரச்சினைகள் உருவெடுத்து இருப்பதை மறைக்க, மக்கள் மத்தியில் போலி நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அணு உலைகளுக்கு இந்திய அரசு தரக்கட்டுப்பாட்டு சான்று வழங்கியதாக தெரிகிறது. ரஷ்யா நாட்டு தொழில்நுட்ப உபகரணங்களுக்கு இந்தியா எப்படி தர சான்றிதழ் வழங்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது" என்றார்.

இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் எடுத்துச் செல்ல மின் நிறுத்தம்; கிராம மக்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.