கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி (45). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
தற்போது இந்தியா வந்துள்ள இவர், கடந்த வாரம் உறவினர் ஊரான கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்திற்கு சென்றிருந்தார். நேற்று சொந்த ஊரான மூரார்பாளையத்திற்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின், இது குறித்து சங்கராபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நகைக்கடை திருட்டு: 45 சவரன் தங்க நகைகள் அபேஸ்!