கன்னியாகுமரி: கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன் என அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் இன்று சின்ன முட்டம், கன்னியாகுமரி, புதுக்கிராமம், வாவத்துறை உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது, வந்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன். அதேபோல் என்னை வெற்றிபெறச் செய்து நான் எம்.எல்.ஏவாக ஆன பின்னர் சரக்கு பெட்டக துறைமுகம் வந்தால் நான் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் என்றார்.
அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தின் இந்த பேச்சு துறைமுகம் வரும் என்று அச்சத்தில் இருந்த மீனவ மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.