நடிகை நயன்தாரா தற்போது 'மூக்குத்தி அம்மன்' என்னும் திரைப்படத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் வேடத்தில் நடித்துவருகிறார். இதற்காக அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.
இரணியல், திங்கள் சந்தை, சங்குதுறை பீச் உள்ளிட்ட பகுதிகளில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதையடுத்து சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தனது காதலனுடன் சாமி தரிசனம் செய்தார்.
தற்போது சாமிதோப்பில் திருஏடு வாசிப்புத் திருவிழா நடப்பதால் ஒரு மணிநேரம் அமர்ந்து ஏடுவாசிப்பு தொடங்கிய பின்னர் பதி முன்பு நின்ற ரசிகர்களுடன் புகைப்படங்களும் செல்ஃபியும் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். திடீரென சாமித்தோப்பிற்கு நயன்தாரா வந்தால் அவரைக் காண வந்த ரசிகர்கள், அய்யாவழி பக்தர்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.