கன்னியாகுமரி: இளைஞர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தா நல்லோர் வட்டம் என்ற அமைப்பு சார்பில் கன்னியாகுமாரி விவேகானந்தா கேந்திராவில், இளைஞர்கள் கஞ்சா, போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் அதனைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முடிவதிலிருந்தும் 1500 பேர் கலந்து கொண்டனர். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு விவேகானந்தரின் போதனைகள் மற்றும் பெண்ணுரிமை குறித்தும் பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது எதிர்க்கட்சிகள் இந்துத்துவாவை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரங்களில் தலையில் டர்பன் கட்டுவது, பூநூல், கோயில் போன்றவை நியாபகம் வருகிறது. கோயிலுக்கு போக வேண்டாம் என்று கூறுபவர்களும் தேர்தல் நேரத்தில் கோயிலுக்கு செல்கிறார்கள். மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. திமுக ஒரு அரசாங்கம் நடத்துகிறது, அதற்கு மேல் ஆளுநர் இருக்கிறார். அந்த அரசாங்கத்தை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கும் ஆளாக ஆளுநர் இருக்கிறார். சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது பொன்முடி 'போயா' எனக் கைகாட்டுகிறார். பொன்முடி செய்தது பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பேருந்தில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார். இதற்கும் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை எனக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்லியிருக்கிறார். அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை. காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்கமாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை. ஆளுநருக்கு எதிராக கோஷம் போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படிச் செய்கிறார்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க:Ramar Bridge case: ராமர் பால வழக்கில் கூடுதல் அவகாசம் - உச்ச நீதிமன்றம்