கன்னியாகுமரி: அருமனை அருகே மேலத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை ஒன்றில் பயனாளி ஒருவர் அரசி வாங்க சென்றுள்ளார். அப்போது அரிசியின் எடை குறைவாக இருந்ததை கண்டு சந்தேகமடைந்த அவர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் இது எத்தனை கிலோ உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த பெண் ஊழியர் 20 கிலோ என்று பதில் கூறியதும், பயனாளி சற்றும் தாமதிக்காமல் அதே அரிசி மூட்டையை எடை மெஷினில் தூக்கி வைத்து பார்த்துள்ளார். அதில் 17 கிலோ அரிசி மட்டுமே இருந்தது. அதன்பின் அந்த பயனாளி காலி சாக்கு பையின் எடை போக இதில் எத்தனை கிலோ இருக்கும்? என கேள்வி எழுப்ப, அந்த பெண் ஊழியர் பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.
இதனால் அந்த பயனாளி, கடையில் மக்கள் பார்வைக்கு எடை இயந்திரம் வைக்கப்படவில்லை, உங்கள் பார்வைக்கு மட்டும் எடை இயந்திரத்தை வைத்து மக்களை ஏமாற்றி, எடை குறைவாக அரசி வழங்கி வருகின்றனர் என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு இப்படி மோசடி செய்து அரிசி வியாபாரிகளுக்கு அதை வழங்கி லாபம் ஈட்டி வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலம்!