கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பட்டசாலியன்விளையில் உள்ள சுடலை மாடசுவாமி கோயில் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பந்தல் அமைக்கும் பணி நேற்று (ஜூலை 4) நடந்தது. அப்போது தொழிலாளர்கள் சாலையினோரம் கம்பை தூக்கிச்சென்றனர்.
இந்த கம்பு அந்த நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தட்டியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். இவர்கள் மீது எதிரே வந்த கார் ஏறியது.
இதனால் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை அருகிலிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இடுக்கியில் மண்சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு