ETV Bharat / state

குமரியில் ஈஸ்டர் கோலாகலம்.. பேராயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி! - special Easter

நாகர்கோவில், கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவில் மறை மாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பேராயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி

author img

By

Published : Apr 9, 2023, 12:57 PM IST

பேராயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி

கன்னியாகுமரி: இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை நினைவு கூறும் புனித வெள்ளி கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 29 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது.

மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வைக் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவ சபைகளும் பாஸ்கா விழாவை நினைவு கூறும் விதமாக இது அமைந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வாரி மலையில் சொல்ல முடியாத அளவு துயரத்தில் தலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு சித்திரவதைக்கு ஆளான போதும் தனக்குத் தண்டனை கொடுத்த அவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார்.

இறைவா இவர்கள் செய்வது என்னதென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என வேண்டிக் கொண்டார். இந்த இறை குணம் மனிதனுக்கும் வர வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது ஆனால் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் இயேசு பிரானை சிலுவையில் அரைந்தனர். சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசு அன்றிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்நாள் ஈஸ்டர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் தினமான நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது 40 நாட்கள் தவக்காலத்தில் கடைசி வாரம் புனித வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனியோடு தொடங்கியது 6 ஆம் தேதி புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. அன்று பாதம் கழுவும் நிகழ்ச்சியும் புனித வெள்ளி அன்று திருச்சிலுவை முத்தமிடல் சிலுவை பாதை வழிபாடுகளுடன் அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகளும் திருப்பலியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. ஈஸ்டர் பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலி கோட்டார் மறை மாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையிலும் நடைபெற்றது. அதில் ஏராளமான அருள் பணியாளர்கள், கன்னியாஸ்திரீகள், கிறிஸ்தவ பெருமக்கள் குடும்பத்துடன் இந்த நள்ளிரவு திருப்பலியில் கலந்து கொண்டனர்.

தேவாலயத்தில் இயேசு உயிர்த்தெழுதலை மெழுகுவர்த்திகள் ஏற்றிச் சிறப்பு பிரார்த்தனைகளும் திருப்பலிகளும் நடைபெற்றது. பாஸ்கா திரியில் ஒளியேற்றப்பட்டு ’கிறிஸ்துவின் ஒளி இதுதான்’ என்ற பாடலுடன் தேவாலயத்துக்கு வந்த மக்களும் கையில் உள்ள மெழுகுவர்த்திகள் ஏற்றி இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி சிறப்புடன் நடத்தினர். தொடர்ந்து ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு , திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு என நான்கு பகுதிகளாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பின்னர் உயிர்த்தெழுந்த இயேசுவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் மாற்றுத்திறனாளியுடன் செல்பி எடுத்த பிரதமர்.. தேசிய கவனத்தை ஈர்த்த நபர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.