ETV Bharat / state

குமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 5 டன் ரேசன் அரிசி

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் அரசு முத்திரை பதிக்கப்பட்ட சாக்குமூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 ration rice smuggled to kerala
ration rice smuggled to kerala
author img

By

Published : Oct 20, 2020, 5:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடத்தலை தடுக்க பறக்கும் படை மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த நேரத்தில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு அதிகரித்திருந்ததால் இடையில் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்திருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் பரவலாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவில் ரயில்வே சாலையில் உள்ள பிஜிஎஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஐயப்பன் என்பவரது வீட்டில் ஐந்து டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி வைத்திருந்த சாக்கு மூட்டைகளில் அரசு முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் இங்கு கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஐயப்பன் உள்பட இருவரை கைது செய்து கோட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்தவிருந்த 2,000 கிலோ மஞ்சள் பறிமுதல் - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.