கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புரவசேரி அடுத்த பழையாற்றின் கரையில் சாராயம் வடிப்பதாகவும், ஆற்றில் குளிக்க வருவது போல், பலர் வந்து சாராயம் குடித்துச் செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், வடசேரி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சத்திய சோபன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சாராய வடிப்பு, குடிமகன்களின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று(மார்ச்.12), காலை பழையாற்றங்கரையில் காவல் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், சுமார் 5 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதோடு 200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சாராய உற்பத்தியில் ஈடுபட்ட ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சனை(45) காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் ஏமாற்றம்... பணமின்றி 1,200 கிமீ தண்டவாளத்தில் நடந்த முதியவர்!