கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கரோனா நாளுக்கு நாள் மிக வேகமாகக் குறைந்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 63 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் தினமும் 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை நான்கு என்ற நிலைக்கு வந்துள்ளது. இதுவரை சுமார் 1,250 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இரண்டாவது அலை நிறைவடைந்து மூன்றாவது அலை தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த மூன்றாவது அலையில் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் குமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 1 முதல் 5 வயதுக்குள்பட்ட 2 குழந்தைகள் இறந்துள்ளனர்.
ஏற்கனவே கரோனா இரண்டாவது அலை குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகமும், மருத்துவ கல்லூரி நிர்வாகமும் விரைந்து செய்துவருகிறது. மேலும் குமரியில் ஒரேநாளில் இரண்டு குழந்தைகள் இறந்திருப்பது மாவட்டத்தில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
குமரியில் கரோனாவால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் கரோனா பாதிப்பிற்கு 5 வயதிற்குள்பட்ட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.