ETV Bharat / state

144 தடை உத்தரவு: மின் கட்டணம் கட்டுவதற்குச் சிரமப்படும் பொதுமக்கள்! - மின் கட்டணம் கட்டுவதற்கு பொதுமக்கள் சிரமம்

குமரி: 144 தடை உத்தரவால் மின் கட்டணம் கட்டுவதற்கு பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளதால் 3 மாதம் விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் கட்டணம் கட்டுவதற்கு பொதுமக்கள் சிரமம்

author img

By

Published : Apr 18, 2020, 4:27 PM IST

குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே வர ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள், தினக்கூலிகள், நிறுவனங்களில் வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாததால், அவர்களால் அன்றாட செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கு 3 மாதம் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.

மின் கட்டணம் கட்டுவதற்கு பொதுமக்கள் சிரமம்

இதனால் அரசு, கடந்த மாதம் மின்சாரம் கட்டிய ரசீதை வைத்து, அதே தொகையினை இந்த மாதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்குச் செல்லாமல் செலவுக்குப் பணமில்லாமல் இருக்கும் போது, அரசு மின் கட்டணத்தை கட்ட சொல்லியிருப்பது பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

அதேபோல பல இடங்களில் கேபிள் ஆபரேட்டர்கள் மாதந்தோறும் கேபிள் கட்டணத்தை கட்ட வேண்டும், இல்லையென்றால் கேபிள் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று கூறி மிரட்டி வருகின்றனர்.

இதனால் பொது மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே, வங்கிக் கடன்களுக்கு விலக்கு அளித்ததுபோல் மின்சாரக் கட்டணம், கேபிள் கட்டணம் போன்றவற்றிற்கு மூன்று மாதம் விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எந்த வழிமுறையையும் பின்பற்றாத விஜயன் அரசு - உம்மன் சாண்டி சாடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.