காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(36). இவருக்கு இரு மனைவிகள் மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக சுங்குவார்சத்திரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர், சிகிச்சை மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக சங்கர் உயிரிழந்துள்ளார். பின்னர் தவறான சிகிச்சை காரணமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக சங்கரின் மனைவி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து வந்த சங்கரின் உறவினர்கள் சுமார் 50பேர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவரை கைதுசெய்யும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சுங்குப்வார்சத்திரம் காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சங்கரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பேடிஎம் செயலியில் இருந்து ரூ.48 ஆயிரம் மாயம் - ஆன்லைன் திருட்டு கும்பலின் சதியா?