ETV Bharat / state

கல்குவாரி லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்:  இளையனார்வேலூர் பகுதியில் கல்குவாரி லாரி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

youngster died in lorry collision in Kanchipuram

author img

By

Published : Aug 27, 2020, 6:31 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் இளையனார்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவர் தனது மனைவியுடன் அருகில் உள்ள வாலாஜாபாத் பகுதிக்கு நாள்தோறும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். தொடர் பணி காரணமாக நேற்று (ஆகஸ்ட் 26) இருவரும் வேலை இடத்திலேயே தங்கியுள்ளனர்.

இதனால் அவர்களுக்கு தேவையான உடை, உணவுகளை எடுத்துக் கொண்டு அவரது மகன் தினேஷ், விக்னேஷ் இருவரும் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, இளையனார் வேலூர் பகுதியில் மாகரல் நோக்கி வந்து கொண்டிருந்த கல்குவாரி கனரக லாரி அவர்கள் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் தலை நசுங்கி உயிரிழந்தார். விக்னேஷ் சிறிய காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் கல் குவாரிகளால் நாள்தோறும் உயிரிழப்பு, பலத்த காயங்களுடன் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி உள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே லாரிகளை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.