புரெவி புயல் காரணமாக பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் வினாடிக்கு 610 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதிகபடியாக நீர் வெளியேறுவதால் மிகவும் வேகத்தோடு கலங்கள் வழியாக தண்ணீர் பாய்கிறது. இந்த ஆபத்தினை உணராத பொதுமக்கள் சிலர் மீன் பிடித்து வருகின்றனர்.
சிலர் கலங்களில் அமர்ந்தும் மற்றும் சில பெண்கள் செல்பி எடுத்தும் விளையாடி வருகின்றனர். எனவே அரசு கவனம் செலுத்தி உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் இவர்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடுஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் காஞ்சிபுரம் குருவிமலை பாலாற்றில் குளித்த மூன்று சிறுமிகள் தண்னீரில் மூழ்கி மாயமான நிலையில் இறந்த நிலையில் மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆபத்தை உணராமல் கீழ்பவானி வாய்க்காலில் ’செல்பி’ எடுத்து மகிழும் பொதுமக்கள்!