ETV Bharat / state

அரசு விதிகளை வகுப்பது நாங்க... அதை மீறுவதும் நாங்க தான்! - Kanchipuram District News

காஞ்சிபுரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட முழு பாதுகாப்பு மண்டலத்தில் அதிமுகவினர் தகுந்த இடைவெளியின்றி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தகுந்த இடைவெளியை மீறும் பொதுமக்கள்
தகுந்த இடைவெளியை மீறும் பொதுமக்கள்
author img

By

Published : Jul 20, 2020, 6:27 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் நேற்றுவரை(19.07.20) நான்கு ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று இரண்டு ஆயிரத்து 543 பேர் வீடு திரும்பினர். மேலும் இதுவரை சிகிச்சை பலனின்றி 66 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான பிள்ளையார் பாளையத்தில் ஐந்து வார்டுகளை உள்ளடக்கிய 23 தெருக்களை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா முழு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்துள்ளார்.

இந்தப் பகுதிகளில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பெருநகராட்சி மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தகுந்த இடைவெளியை மீறும் பொதுமக்கள்
இந்நிலையில் இப்பகுதி பொது மக்களுக்கு நகர அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம் ஆகியோர் முகக் கவசம், சானிடைசர் மற்றும் கைகழுவ சோப்புகள் ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், எந்த ஒரு அரசு விதிமுறையும் கடைபிடிக்காமல் பொருள்களை மக்கள் அள்ளி சென்றனர். இதை எந்த ஒரு அதிமுகவினரும் ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் ஈடுபடாமல், அவர்களும் பொதுமக்களுக்கு அளித்தவாரே இருந்தனர். இது சமூக ஆர்வலர்களை கவலைக்கொள்ள செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.