ETV Bharat / state

உத்தரமேரூரில் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் சுருட்டியவர் தலைமறைவு - chit cheating

உத்தரமேரூரில் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் சுருட்டியவர் தலைமறைவான நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்  உத்தரமேரூரில் சீட்டு  சீட்டு  மோசடி  chit collecting person esape  Uthiramerur chit collecting person  esape  chit cheating  kanchipuram district news

author img

By

Published : Apr 12, 2021, 6:27 AM IST

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் பேரூராட்சியில் பாவோடும் தோப்புத் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். 39 வயதான இவர் கார் ஓட்டுநர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். ஏலச் சீட்டானது ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சீட்டு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஏலச் சீட்டில் 100க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பாக்கியராஜ் ஏலச்சீட்டு பணத்தினை முழுமையாக எடுத்துக் கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுகளில் புகார் அளித்திருந்தனர். மேலும் 200 க்கும், மேற்பட்ட பெண்களிடம், தீபாவளி பண்டு சீட்டு, நகைக் கடன், வட்டிக்கு கடன் , தினத் தவணைக் கடன், மாதத் தவணை கடன், மாத தவணை கடன் என பலகோடிக்கு மேல் ஏமாற்றியது புற்றீசல் போல் வெளிவரத்துவங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 100 ற்கும் மேற்பட்டோர் தலைமறைவான பாக்கியராஜின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரமேரூர் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தனர.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.