திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில்
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (பிப். 3) மேற்கொள்கிறார். முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் அண்ணாவுடை உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் தன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "அண்ணா நினைவு இல்லத்தில் எனது பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளேன். மக்களவைத் தேர்தலில் வெற்றி கூட்டணி போல் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியும் வெற்றி பெறும்” என்றார்.
தொடர்ந்து, திமுக கூட்டணி உடையும் என்ற மாநில பாஜக தலைவர் முருகனின் கருத்திற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், 'எப்படி வெற்றிக்கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஸ்டாலின் தன்னை காந்தி என நினைத்துக்கொண்டிருக்கிறார் - ஓபிஎஸ் தாக்கு!