ETV Bharat / state

பணியில் இருந்த அரசு அதிகாரி தற்கொலை..! பணிச்சுமை காரணமா? - பணியில் இருந்த அரசு அதிகாரி தற்கொலை

காஞ்சிபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், கண்காணிப்பாளர் ஒருவர் பணியின் போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 3:12 PM IST

Updated : Jun 28, 2023, 7:35 PM IST

காஞ்சிபுரம்: விழுப்புரத்தை தலைமைக் கோட்டமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் வேலூர், காஞ்சிபுரம் மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இந்த மண்டலங்களில் சுமார் 3ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக் கரை என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளராக பணிபுரியும், சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மணி (59) என்பவர் இன்று (ஜூன் 28) காலை வழக்கம் போல் பணிக்குச் சென்றிருந்தார். அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள அறைக்குச் சென்றவர் தற்கொலை செய்து கொண்டார்.

அறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சக பணியாளர்கள் அவர் சென்ற அறையில் எட்டிப் பார்க்கும்போது அவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிச்சியடைந்தனர். பின்னர், தாலுக்கா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சம்பவ் இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், மணியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள நிலையில் மணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அலுவலக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சக பணியாளர்கள் கூறும்போது, “மணி அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுபவர். மணி இறந்ததற்கு அலுவலக பிரச்னை காரணமா அல்லது சொந்தப் பிரச்னை காரணமா என தெரியவில்லை. காவல் துறையினரின் விசாரணையில் தான் மணியின் இறப்பு குறித்த விவரம் தெரிய வரும்” என கூறினர். தொடர்ந்து,

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பணியில் இருந்த மணி தற்கொலை செய்துள்ளதால் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை தனியார் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் மரணம்.. முதலுதவி பெட்டி கூட இல்லை என பெற்றோர் வேதனை!

Last Updated : Jun 28, 2023, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.