தமிழ்நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதற்காக 450-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்காகத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தனியார் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், பலர் முகக்கவசம் அணியாமலும் வரிசையில் நின்று பரிசோதனை செய்துகொண்டனர். அதனால் கரோனா தீநுண்மி பரவும் இடர் ஏற்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,876 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளி? - மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய மார்க்கெட்!