காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காரணிதாங்கல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே ஏரியில் கலக்க விடுவதால் சுற்றுச்சூழல் மாசு படிக்கிறது. அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்று நீர், கழிவு நீராக மாறி வருகிறது. மேலும், கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா வைரஸ் காய்ச்சல் மற்றும் தோல் வியாதிகள் வரும் அபாயம் உள்ளது.
அதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனையறிந்த, காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் விரைந்து வந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படியுங்க: அனுமதியின்றி செயல்பட்டு வந்த 29 குடிநீர் ஆலைகளுக்கு சீல்!