காஞ்சிபும் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 48 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் கடந்த 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அத்திவரதர் சிலையை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைத்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அத்திவரதர் சிலையை குளத்தில் வைத்து சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அனந்தசரஸ் குளம் தானாகவே நிரம்பிவருகிறது. இரண்டு படிக்கட்டுகள் வரை தண்ணீர் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏற்கனவே சிலை எடுத்தபோது, குளத்தில் இருந்த மீன்களை பொற்றாமரைக் குளத்திற்கு மாற்றியுள்ளதால், அதை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்கு மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதை விற்கவும் முடியாமல், வேறு குளத்திற்கு மாற்றவும் முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.