காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு ஊரகத் தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாள் (வயது 83) அவர்கள் நேற்று(பிப்ரவரி 10) இரவு 10.00 மணியளவில் காலமானார்.
மறைந்த ராஜாமணி அம்மாளுக்கு தா.மோ.அன்பரசன் - தா.மோ.எழிலரசன் ஆகிய இரு மகன்களும், கனிமொழி, பவானி, கண்மணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
அவரது உடல் குன்றத்தூரில் உள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. குன்றத்தூர் இடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஓபிஎஸ் உதவியாளர் மூலம் முறைகேடாக கிராவல் அள்ளப்பட்ட புகார் - அரசு அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு