சென்னையை அடுத்த காட்டாங்களத்தூர் அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் தனியார் கல்லூரி. இங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள் கடந்த 4ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில், மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்திவந்தது.
விசாரணையில் மோதலில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள் லலித்பிரகாஷ், விஷ்ணு ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், தற்போது கல்லூரியில் பயின்று வரும் ராகேஷ், ரஜித், பென்றோ, கார்த்தி, பிரவீன், ஆதித்யா, கார்த்தி, மெளலாலி ஆகிய பத்து பேரை மறைமலைநகர் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பத்து பேரையும் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அங்கு, நீதிபதி காயத்ரி தேவி, பத்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி, தினமும் மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: SRM கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!