கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனைத் தடுக்க உலகம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கரோனாவுக்கான மருந்து கண்டுபிடித்த பின்னரே வைரஸ் அச்சுறுத்தல் குறையும் என நம்பப்படுகிறது.
முன்னதாக, காஞ்சிபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முதியவர்கள் ஒன்றிணைந்து மார்கழி மாதங்களில் பஜனை பாடி வந்த நிலையில், தற்போது அப்பகுதி முதியவர்கள் ஒன்றிணைந்து கரோனா வைரஸ் நீங்கி உலக மக்கள் நன்மை பெற வேண்டி, ஆழ்வார் பிரபந்தங்களை பஜனையாகப் பாடியபடி காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் காலை வேளைகளில் வீதியுலா வருகின்றனர்.
இவர்களின் இந்த முயற்சிக்கு பொது மக்களும் ஆதரவளித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு - விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!