ETV Bharat / state

திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - marry and shouted

காஞ்சிபுரம்: திருமணம் செய்ய மறுத்ததால் பயிற்சி செவிலியரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த பயிற்சி செவிலியர்
author img

By

Published : Apr 27, 2019, 8:02 PM IST

Updated : Apr 27, 2019, 8:22 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. செவிலியர் படிப்பை முடித்துள்ள இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயந்திக்கும், அவரது உறவினரான வண்டலூர் பகுதியை சேர்ந்த முத்துவுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நாளடைவில் திருமணப் பேச்சு தடைப்பட்டுள்ளது. இதையடுத்து முத்து, ஜெயந்தியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஜெயந்தி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த முத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முத்துவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் பயிற்சி செவிலியருக்கு கத்திக்குத்து.
கத்தியால் குத்திய வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி.

இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் செவிலியர் படிப்பு முடித்துவிட்டு காஞ்சிபுரம் நிமந்தகார தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணி புரிந்து வருகிறார்.

 ஜெயந்திக்கும் அவரது உறவுக்கார முறை பையன் வண்டலூர் பகுதியை சேர்ந்த முத்துவுக்கும் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் ஏதோ காரணத்தால் திருமணப் பேச்சு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக காஞ்சிபுரத்திற்கு செவிலியர் பணிக்கு வரும் ஜெயந்தியை முறைப்பையன் முத்து சந்தித்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜெயந்தி திருமணம் செய்துகொள்ள மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் ஜெயந்தி பணி புரியும் தனியார் மருத்துவமனைக்கு வந்த முத்து ஜெயந்தியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். மீண்டும் ஜெயந்தி திருமணம் செய்ய மறுக்கவே ஆத்திரமடைந்த முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியை கழுத்துப்பகுதியில் குத்தி விட்டு தப்பியோடி மறைந்து கொண்டார். கத்தியால் குத்தப்பட்ட ஜெயந்தி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தது கண்டு மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் தப்பி ஓடிய முத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முத்து தனியார் மருத்துவமனையின் அறையில் மறைந்து கொண்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற முத்துவையும் போலீசார் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Visual in ftp 

TN_KPM_1A_27_NURSE MURDER ATTEMPT03_7204951.mp4

TN_KPM_1B_27_NURSE MURDER ATTEMPT03_7204951.mp4

TN_KPM_1C_27_NURSE MURDER ATTEMPT03_7204951.mp4

Last Updated : Apr 27, 2019, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.