ETV Bharat / state

புதிய மாவட்டத்திற்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பழனிசாமி! - செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம்: புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டதிற்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

new district was opened by cm
புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
author img

By

Published : Nov 29, 2019, 9:05 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டு தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் தொடக்கவிழா செங்கல்பட்டில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய மாவட்டத்தை முறைப்படி தொடக்கி வைத்த முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். புதிதாக அமையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளும், தாம்பரம் செங்கல்பட்டு மதுராந்தகம் என மூன்று வருவாய் கோட்டங்களும் உள்ளன.

மேலும், மாவட்டத்தில் இடம் பெறும் தாலுகாவில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர், செங்கல்பட்டு ஆகியவை உள்ளடக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, ஏர் உழும் இயந்திரம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஆகிய நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்

புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

இறுதியாக அனைத்து துறை சார்பிலும் நடத்தப்பட்ட கண்காட்சியில் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிதாக சிற்றுந்துகளை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: உதயமாகிறது ராணிப்பேட்டை புதிய மாவட்டம் - விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர்!

Intro:செங்கல்பட்டில் இன்று செங்கல்பட்டு புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

Body:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் என மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி செங்கல்பட்டு தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் துவக்கவிழா செங்கல்பட்டில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய மாவட்டத்தில் முறைப்படி துவக்கி வைத்தார் புதிதாக அமையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறும் சட்டமன்றத் தொகுதியில் 6 செங்கல்பட்டு தாம்பரம் பல்லாவரம் திருப்போரூர் மதுராந்தகம் செய்யூர் வருவாய் கோட்டங்கள் 3 தாம்பரம் செங்கல்பட்டு மதுராந்தகம் மாவட்டத்தில் இடம் பெறும் தாலுகாவில் செங்கல்பட்டு தாம்பரம் பல்லாவரம் மதுராந்தகம் செய்யூர் திருக்கழுக்குன்றம் வண்டலூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளடக்கியதாகும் அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஏர் உழும் இயந்திரம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஆகிய நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்

Conclusion:இறுதியாக அனைத்து துறை சார்பிலும் நடத்தப்பட்ட கண்காட்சியில் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிதாக மினிபஸ் சிற்றுந்து துவக்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.