ETV Bharat / state

தண்ணீர் பற்றாக்குறையால் பாதி நேரம் மட்டும் செயல்படும் தனியார் பள்ளி - school closed

காஞ்சிபுரம்:தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கத் தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு தினமும் அரைநாள் விடுமுறை அளித்து வருகிறது .

தண்ணீர் பற்றாக்குறையால் விடுமுறை விட்ட தனியார் பள்ளி
author img

By

Published : Jun 19, 2019, 5:55 PM IST

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் மட்டுமல்லாது பிற தேவைகளுக்கான நீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மழையில்லாமல் போன காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் கத்ரி மெட்ரிகுலேசன் பள்ளி தங்களது குடிநீர் தேவைக்காகவும்,பிற தேவைகளுக்காகவும் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை எடுத்து பயன்படுத்தி வந்தது. அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் 400 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் வரவில்லை.

இதனால் குடிநீர் தேவைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் நகராட்சியிடமும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நீரைப் பெற்றுவந்தனர்,இருந்தும் நீருக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக தங்கள் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை வேலை மட்டும் பள்ளி செயல்படும் என்றும், மதியவேலைகளில் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மற்ற பள்ளிகளும் இதே நடைமுறையைப் பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Intro:Body:காஞ்சிபுரம்
19-06-2019

*தண்ணீர் பற்றாக்குறையால் அரைநாள் விடுமுறை விட்ட தனியார் பள்ளி.*

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய வரும் நிலையில் குடிநீர் மட்டுமல்ல பிற தேவைகளுக்கான நீரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மழையின்றி செத்துப் போன காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவில் இயங்கிவரும் கத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளி தங்களது குடிநீர் தேவைக்காகவும்,பிற தேவைகளுக்காகவும் ஆழ்துளை கிணறு அமைத்து நீரை எடுத்து பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் 400 அடிக்கு மேல் அவர் துளை கிணறு அமைத்து தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக பள்ளி குழந்தைகளின் குடிநீர் தேவைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் தனியார் மற்றும் நகராட்சியிடம் இருந்து குடி நீரைப் பெற்று வந்தனர். இந்த நிலையில் குடிநீருக்கான கட்டணம் அதிகரித்துவிட்டதாலும், குடிநீர் கொண்டுவருவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கள் பள்ளியில்எல் கேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை வேளை மட்டும் நடத்துவதாகவும், மதியவேளை வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளிலும் இதே முறையை பின்பற்ற தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.