ETV Bharat / state

திருந்தி வாழ்ந்த முன்னாள் ரவுடி வெட்டி படுகொலை! - அஜய்

படப்பை அருகே திருந்தி வாழ்ந்த ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்பகை காரணமா இவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் மணிமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

chennai crime
chennai crime
author img

By

Published : Jul 29, 2020, 3:24 PM IST

காஞ்சிபுரம்: முன்பகை காரணமாக படப்பை அருகே ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை ஆதனஞ்சேரியைச் சேர்ந்தவர் அஜய்(23). இவர் பல ரவுடி கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு வருட காலமாக எந்த தகராறுக்கும் செல்லாமல் திருந்தி குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார்.

இச்சமயத்தில் இன்று (ஜூலை28) காலை படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அஜய் வாகனத்தில் மோதி நிலை குலையச் செய்துள்ளனர்.

மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது

இதனையடுத்து கீழே விழுந்த அஜய் ஓட முற்பட்டபோது, துரத்திய நபர்களிடமிருந்து தப்பிக்க அருகிலுள்ள உணவகத்தில் ஒளிந்துகொண்டுள்ளார். ஆனால் விடாது துரத்திய அவர்கள் உணவகத்திற்குள் நுழைந்து அஜய்யை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

அஜய் இறந்ததை உறுதிசெய்து பின், அனைவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த மணிமங்கலம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரௌத்திர நாயகன் விஜய் சேதுபதியின் புகைப்படத் தொகுப்பு

இந்நிலையில், திருந்தி வாழ்ந்த ரவுடி முன்பகை காரணமாக வெட்டி கொலை செய்யபட்டாரா என்கிற கோணத்தில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.