சென்னை கேளம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள், இரவு பணியை முடித்து விட்டு வேன் மூலம் வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வேப்பஞ்செரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பாண்டிச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி வந்த லாரி, வேன் மீது வேகமாக மோதியதில் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த ஒரு பெண், 9 ஆண்கள், வேன் ஓட்டுநர் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த வாகன ஓட்டிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேன் ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வேன் மீது லாரி மோதி 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.