தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அதற்கான பணிகளை தொடங்க, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்திரவிட்டது.
இதன் முதல்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இதுவரை இரண்டு முறை வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்காக வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 869 வாக்குபதிவு கன்ட்ரோல் இயந்திரங்களும், 3 ஆயிரத்து 339 வாக்குப்பதிவு எந்திரம், ஆயிரத்து 996 விவிபேட் இயந்திரம் ஆகியவற்றில் பகுதி நீக்குதல், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான முந்தைய விவரங்களை அழித்தல் போன்ற பணிகளை தொடங்க பெல் நிறுவனத்தின் 10 பொறியாளர்கள் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியர் திருமதி.மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் இன்று (டிச.02) பணிகளை தொடங்கினர்.
பத்து நாட்கள் இப்பணிகள் அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் நடைபெறும் எனவும் இது தவிர மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கூடுதல் வாக்கு பதிவு எந்திரங்கள் வரவுள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.