காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய ஆறுகள் பாய்ந்துவருகின்றன. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்றுவருகின்றன.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்த கனமழையால் காஞ்சிபுரத்தில் 184 மி.மீ., உத்திரமேரூரில் 72 மி.மீ., வாலாஜாபாத்தில் 68 மி.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
இதனால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ள நீர் உத்திரமேரூர், திருப்புலிவனம் ஏரிகளுக்குப் பொதுப்பணித் துறையால் திருப்பிவிடப்பட்டது.
இதேபோல் மாகரல், திருமுக்கூடல் அருகே உள்ள தடுப்பணைக்கும் வரத்தொடங்கிய நீர் அருகில் உள்ள கிராம ஏரிகளுக்கும் திருப்பிவிடப்பட்டது. நீர் வீணாவதைத் தடுக்க பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ள இந்தச் செயல், உழவரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கனிம வளம் கொள்ளை - சமூக ஆர்வலர்கள் கண்டனம்