காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், இதுவரை 1 லட்சத்து, 42 ஆயிரத்து 749 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் 18 - 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு 8.51 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது, 500 தடுப்பூசி மட்டுமே கை இருப்பில் உள்ளது. இதனால், கடந்த இரண்டு தினங்களாக அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள், இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.
இந்நிலையில், தடுப்பூசி வந்தால் மட்டுமே அனைத்து தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாட்டால், முதல் தடுப்பூசி போட முடியாத நிலை உருவாகி உள்ளதால், தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: தொழில்நுட்பத்தால் மருத்துவ சேவை மேம்படும் - கருத்தரங்கில் தகவல்