காஞ்சிபுரம் திருப்புக்குழி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இவர் மார்ச் 27ஆம் தேதி தான் வேலை செய்த நிறுவனத்தின் பேருந்தை திருப்புவதற்காக மோட்டோரோலா நிறுவனத்தை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மோட்டோரோலா நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் வெங்கடேசனை தவிர மற்ற யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவர்- மனைவி தூக்கிட்டு தற்கொலை!