ETV Bharat / state

கடத்தப்பட்ட 6 திருநங்கைகளை 12 மணி நேரத்தில் மீட்ட காவல் துறை!

காஞ்சிபுரம்: கடத்தப்பட்ட திருநங்கைகளை துரித நடவடிக்கையால் 12 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஐந்து திருநங்கைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

police
author img

By

Published : Jun 21, 2019, 9:11 AM IST

Updated : Jun 21, 2019, 10:13 AM IST

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலைப்பகுதியில் உள்ள திருநங்கை குடியிருப்பில் ஏராளமான திருநங்கைகள் வசித்துவருகின்றனர். இங்கு குன்றத்தூர் பகுதியில் இருந்து கடந்த மாதம் அடைக்கலம் கேட்டு வந்த ஆறு திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுத்து இப்பகுதியில் உள்ள திருநங்கைகள் தங்கவைத்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு குன்றத்தூரைச் சேர்ந்த திருநங்கைகள் ரவுடிகளுடன் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் குருவிமலைப்பகுதிக்கு வந்துள்ளனர். கார், ஆட்டோக்களில் வந்த அவர்கள் அங்கிருந்து ஆறு திருநங்கைகளை கடத்திச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை தடுக்க முயன்ற அப்பகுதி திருநங்கைகளை மரக் கிளைகள், கம்பிகள், பட்டா கத்தி மூலம் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் காயமடைந்த திருநங்கைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குன்றத்தூர் பகுதிகளில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

அப்போது குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மகா, அவரின் கூட்டாளிகளான வடிவு, சுப்ரியா, லட்சுமி, ஹரிணி உள்ளிட்ட ஐந்து திருநங்கைகள், கடத்தலுக்கு உதவியாக இருந்த ரமேஷ், கார்த்திக், செல்வம், சேகர் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மூன்று கார், ஒரு ஆட்டோ, பட்டா கத்திகள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தல் சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் காவல் துறையினர் அதிரடியாக திருநங்கைகளை மீட்டு குற்றவாளிகளை பிடித்ததால் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு காரணமான குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த மகா என்கின்ற மகாலட்சுமி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும் குன்றத்தூர் பகுதியில் இருந்து அடைக்கலம் தேடிவந்த ஆறு திருநங்கைகள் கடந்த மாதம் சக திருநங்கைகளுடன் கிணற்றில் குளித்தபோது, ஒரு திருநங்கை இறந்துவிட்டார்.

இது குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஒரு திருநங்கை இறந்தது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்திவந்த நிலையில் தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆகையால் காவல் துறையினர் இரு பிரிவினரிடமும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:*நேற்று இரவு திருநங்கையை கடத்திய வழக்கில் 5 திருநங்கை உட்பட 9 பேர் கைது. கடத்தபட்ட 6 திருநங்கைகள் மீட்ட ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீசார் 12 மணி நேரத்தில் மீட்டனர்*

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலைப்பகுதியில் திருநங்கை குடியிருப்பு உள்ளது அதில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். குன்றத்தூர் பகுதியில் இருந்து கடந்த மாதம் 6 திருநங்கைகள் இந்த பகுதிக்கு அடைக்கலம் கேட்டு வந்தனர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகள் அடைக்கலம் கொடுத்தார். நேற்று இரவு 6 திருநங்கைகள் கடத்த குன்றத்தூரை சேர்ந்த திருநங்கைகள் ரவுடிகளுடன் பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு வந்து 6 திருநங்கைகளை கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி சென்றனர் தடுக்க முயன்ற திருநங்கைகளை மரக் கிளைகளை உடைத்து கம்பிகள் மற்றும் பட்டா கத்தி மூலம் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த திருநங்கைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷத்தில் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து குன்றத்தூர் மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை மகா என்கின்ற மகாலட்சுமி இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது அவர்கள் கூட்டாளியான வடிவு, சுப்ரியா, லட்சுமி, ஹரிணி உள்ளிட்ட 5 திருநங்கைகளும் மற்றும் உதவியாக இருந்த ரமேஷ், கார்த்திக், செல்வம், சேகர் உள்ளிட்டோர் கைது செய்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வந்த பிடித்து கைது செய்தனர். இச்சம்பவத்தில் கடத்தலில் பயன்படுத்திய 3 கார் ஒரு ஆட்டோ மற்றும் பட்டா கத்திகள் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். கடத்தல் சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக திருநங்கைகளை மீட்டு குற்றவாளிகளை பிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு காரணம் ஆன குன்றத்தூர் பகுதியை சேர்ந்த மகா என்கின்ற மகாலட்சுமி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது மேலும் குன்றத்தூர் பகுதியில் இருந்து அடைக்கலம் தேடி வந்த 6 திருநங்கைகள் கடந்த மாதம் சக திருநங்கைகளுடன் கிணற்றில் குளித்த போது ஒரு திருநங்கை இறந்துவிட்டார். இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது ஒரு திருநங்கை இறந்தது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது ஆகையால் போலீசார் இரு பிரிவினரையும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
Last Updated : Jun 21, 2019, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.