காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (55). இவர் நேற்று (அக்.13) பிற்பகல் அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்குத் மகளுடன் சென்றுள்ளார்.
வீட்டின் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் எவ்வித பதற்றம் இன்றி சாதரணமாக நடந்துசென்று ராஜேஸ்வரியின் கழுத்திலிருந்த 6 சவரன் தங்க செயினைப் பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.
சிசிடிவி மூலம் விசாரணை
இதையடுத்து, அவர் கூச்சல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். இருந்தபோதிலும் அவர்கள் தப்பிச் சென்றனர்.
இது குறித்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டபகலில் டிஎஸ்பி அலுவலகம், காவலர்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண் மருத்துவரிடம் நகை பறிக்க முயற்சி: சிசிடிவி வெளியீடு